அலங்காரம்

அலங்காரம்………….
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்………….
அலங்காரம் என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு அழகு செய்தல் , ஒப்பனை , மினுக்கல்
சங்கீத உறுப்பு வகை
சிங்காரம் , ஜோடிப்பு,
ஆபரணம் செய்யுள் அணி (தன்மை , உவமை போன்ற 35 செய்யுள் அணிகள்) என்று அர்த்தம் கொள்ளலாம்……
சிவபெருமானை அபிஷேகப் பிரியர் என்றும் மகாவிஷ்ணுவை அலங்காரப் பிரியர் என்றும் பொதுவாகச் சொல்வார்கள். நம்முடைய அழகிற்கு மேலும் அழகூட்டுவது தான் அலங்காரத்தின் முக்கிய நோக்கம்……… நாட்டியம் ஆடும் பெண்மணிகள் ஒப்பனை செய்து கொண்டு பல ஆபரணங்களை அணிந்து கொண்டு பாவங்களைக் காட்டி நடனம் ஆடுவதைப் பார்த்திருக்கிறோம்…….
பல கோவில்களில் உற்சவர்களுக்கு அலங்காரம் செய்து பச்சை மத்தாப்பு சிவப்பு மத்தாப்பு என மத்தாப்புகளை எல்லாம் காட்டி திருவீதி உலா வரும் அழகிய காட்சிகளையும் கண்டிருக்கிறோம்……….
எங்களது கலைமகள் ஆசிரியராக இருந்த பெருந்தகை கி வா ஜ கந்தர் அலங்காரத்திற்கு மிக

அருமையான

உரை எழுதியுள்ளார். கந்தர் அலங்கார உரைகளில் அவருடைய உரை தான் சிறப்பானது……..

அருணகிரிநாத சுவாமிகள் இயற்றியருளிய
கந்தரலங்காரம் என்னும் நூற்பெயரானது கந்தர், அலங்காரம் என்னும் இரு சொற்களால் ஆனதாகும்……..
‘பற்றுக்கோடு’ என்னும்
பொருளுடைய ‘கந்து’ என்னும் தமிழ்ச்சொல் வழிவந்த ‘கந்தர்’, அல்லது ‘கந்தன்’ என்னும் சொல். திருமுருகப்பெருமானைக் குறிக்கும் திருப்பெயர்களுள் கந்தன் என்பதும் ஒன்றாகும்………
திருமுருகனைக்
குறிக்கும் கந்தன் ‘ஸ்கந்த’ என்னும் வடமொழிப் பெயருடன்
தொடர்புடையது என்று கூறுவோரும் உள்ளனர்…….
‘அலங்காரம்’ என்னும்
சொல் பொதுவாகக் குறிப்பிட்டதொரு தெய்வத்தின் திருமேனியினைத் திருவடிகள் முதல் தலையுச்சி வரையில்
பல்வேறு அணிகலன்களால்
அலங்கரித்தல் என்பதை உணர்த்துவதாகும். அத்தகைய அலங்காரம் மட்டுமன்றி, திருமுருகப்பெருமானைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளும் புராணச் செய்திகளும் அடங்கிய திருமுருகப்பெருமானின் அலங்காரமாகக்
குறிப்பிடும் நூல் கந்தரலங்காரம் எனப்படும்………….
தண்டி என்னும் புலவர் பல்லவர் ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்தார். இவர் சமஸ்கிருதத்தில் ‘தண்டியலங்காரம்’ என்னும் நூலை இயற்றி உள்ளார். இந்த நூலைத் தழுவித் தமிழில் தண்டியலங்காரம் என்னும் நூல் தோன்றியது. தமிழில் எழுதப்பட்ட இந்த நூலும் தண்டியலங்காரம் என்னும் பெயரைப் பெற்றது. தமிழில் தண்டியலங்காரம் செய்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
சமஸ்கிருதக் காவியக் கோட்பாடுகளில் முதன்மையானதாக விளங்குவது அலங்காரக் கோட்பாடாகும். புலவன் தன் கற்பனை உணர்வை படைப்பில் வடிப்பதற்கும், தன் கருத்தைச் சொல்வதற்கும் கையாளும் உத்திகளுக்கும் உவமை அணியை பயன்படுத்துகிறான். எனவே அலங்காரக் கோட்பாட்டில் உவமை அணியே முதன்மையானதாக இருக்கிறது………………
அப்பய தீக்ஷிதர் என்கிற மகான் அலங்காரத்திற்கு நல்ல விளக்கம் தந்துள்ளார்……….”அதாவது உவமை என்ற சிறந்த நாட்டியக்காரி பலவகை வேடங்களை அணிந்து இலக்கியம் என்னும் அரங்கில் தோன்றி பலவகை கலைகளால் நாட்டியங்கள் ஆடி புலவர் உள்ளத்தை மகிழ்விப்பாள்………. “
உவமை என்பதை நயம் பட விவரிக்கிறார் அப்பய தீக்ஷிதர். அலங்காரசாஸ்திரத்தின் உயிரே உவமை தான்………….. தனக்கு ஒரு உவமை இல்லாதவன் இறைவன் மட்டும் தான்…………
100008 வெற்றிலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட நாமக்கல் ஹனுமாரை கீழே காண்கிறீர்கள்

alankaram.jpg

Leave a Reply